டெல்லி: பிரதமர் மோடி இன்று (ஜன.5) பேசுகையில், “டெல்லி மற்றும் டெல்லி குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக மக்கள் பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சிறப்பு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். உலகின் மற்ற பகுதிகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் நகர்ப்புற வளர்ச்சியின் மாதிரி டெல்லிக்கு தேவைப்படுகிறது. மாநிலத்திலும் மத்தியிலும் பாஜகவுக்கு வாய்ப்பு அளித்தால் மட்டுமே இதை சாதிக்க முடியும்” என்றார்.