தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மூளையில் வீக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சிறநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, அதே மருத்துவமனையில் அவர் அறுவை சிகிச்சை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.