கடையில் வேலைக்கு சென்றவர் காணவில்லை: வழக்குப்பதிவு

82பார்த்தது
கடையில் வேலைக்கு சென்றவர் காணவில்லை: வழக்குப்பதிவு
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் காமலாபுரம், பெரியகரடு காலனியைச் சேர்ந்த கோபி என்பவரின் மனைவி நந்தினி வயது (32). இவர்களுக்கு 14 வயது மகள், 9 வயது மகன் மற்றும் 6 வயதில் ஒரு மகள் ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நந்தினி சேலம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து நந்தினியின் கணவர் கோபி உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஓமலூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் ஓமலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். புகைப்படத்தில் உள்ள இவரை யாரேனும் கண்டால் நந்தினியின் கணவரின் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு 9080811395 தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி