சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சி கட்டிக்காரனூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டிக்கொடுக்க கோரி மணி எம்.எல்.ஏ. வுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 11 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தப் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஓமலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியைத் தொடங்கி வைத்தார்.