ஓமலூரை அடுத்துள்ள பாகல்பட்டி செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓமலூர் தீயணைப்பு துறையினர் சார்பில் நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்லூரி செயலர் ஆண்டனி மரியா ஜான்சி, கல்லூரி நிர்வாகி ரீத்தாமேரி மற்றும் கல்லூரி முதல்வர் அமீர், கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.