சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான ஓமலூர், காடையாம்பட்டி ஒன்றிய சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட செயலாளர் அமலாராணி தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய பட்ஜெட்டில் மாற்று திறனாளிகளுக்கு எந்தவித சலுகைகளும் வழங்காதை கண்டித்தும், ஏற்கனவே 100 நாட்கள் வேலைவாய்ப்பை தங்களுக்கு வழங்காமல் வஞ்சித்தும் விட்ட நிலையில், மத்திய பட்ஜெட்டில் மாற்று உதவித்தொகையை ரூபாய் 300 இல் இருந்து ரூபாய் 1000 தர வேண்டு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.