தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய கணித நாள்

51பார்த்தது
தீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய கணித நாள்
சேலம் தீரஜ்லால் காந்தி தொழில் நுட்பக்கல்லூரியில் கணிதமேதை ராமானுஜர் பிறந்தநாளையொட்டி தேசிய கணிதநாள் விழாவை கொண்டாடும் நோக்கில் கட்டுரை, வினாடி-வினா மற்றும் குறும்பட போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசு ெவன்றனர். மேலும் கணித வினா விடை புத்தகம் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்லூரியின் ஐ. எஸ். ஆர். செல் மூலம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், சமுதாய பொறுப்புணர்வோடு அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் கணித வினா- விடை புத்தகம் கல்லூரியின் இணையதளம் www. dgct. ac. in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பிளஸ்-2 தேர்வில் அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்ற கல்லூரியின் சார்பில் வாழ்த்துக்கள் என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you