சேலம்: போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடிய கொள்ளையனுக்கு கால் முறிவு

62பார்த்தது
சேலம்: போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடிய கொள்ளையனுக்கு கால் முறிவு
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்திற்குட்பட்ட தொட்டில்பட்டி பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது. இதுதொடர்பான புகாரின்பேரில் கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் மெகடா (வயது 25) என்பவரை கைது செய்து மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் போலீஸ் பிடியில் இருந்து திடீரென தப்பி ஓடினார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த கொள்ளையனை மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி