பாமக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற எம்எல்ஏ. வுக்கு வரவேற்பு

69பார்த்தது
பாமக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற எம்எல்ஏ. வுக்கு வரவேற்பு
சேலம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக மேட்டூர் தொகுதி எம். எல். ஏ. சதாசிவத்தை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். கட்சியின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பிறகு சதாசிவம் எம். எல். ஏ. மேச்சேரிக்கு வந்தார். அங்கு மேச்சேரி ஒன்றிய, பேரூர் பா. ம. க. சார்பில் மேச்சேரி பஸ் நிலையத்தில் அவருக்கு மேளதாளங்கள் முழங்க சால்வை மற்றும் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மேச்சேரி ஒன்றிய பா. ம. க. செயலாளர்கள் அக்னி சுதாகர், துரைராஜ், மாதப்பன் மேச்சேரி பேரூர் செயலாளர் கோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி