சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கந்தனூர் பகுதியை சேர்ந்த பாலாஜி -மேகலா தம்பதியின் மகள் யாழினி. இவருக்கு பூப்புனித நீராட்டு விழா நேற்று பொட்டனேரி அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவையொட்டி யாழினியின் தாய் மாமன் சவுந்தர்ராஜன், மேட்டூர் ராமன் நகர் பகுதியில் இருந்து டிரைலர் லாரி மற்றும் 3 மாட்டு வண்டிகளில் சீர் வரிசைகளை எடுத்து சென்றார். அதில் 150 வகையான தட்டுகள் மற்றும் வாழைத்தார்களை மேளதாளம் முழங்க, பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் ஊர்வலமாக விழா நடக்கும் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றார். இதனை அந்த பகுதி பொதுமக்கள் கண்டு வியந்தனர்.