நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சாமி கோயிலில் 10ஜோடி இலவச திருமணம்

61பார்த்தது
நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சாமி கோயிலில் 10ஜோடி இலவச திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் 31 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தொடர்ந்து சேலம் மாவட்டம் நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் திருமண விழா நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் தலைமை தாங்கி 18 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களுக்கு அட்சதை தூவி ஆசீர் வாதம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -
மேட்டூர் தாலுகா நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் 10 ஜோடிகளுக்கும், வாழப்பாடி தாலுகா பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 8 ஜோடிகளுக்கும் என மாவட்டத்தில் மொத்தம் 18 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
புதுமண தம்பதியினருக்கு 4 கிராம் தங்கத்தில் தாலி, கைக்கெடிகாரம், பூஜை பொருட்கள், கட்டில், பீரோ, மெத்தை, மிக்சி மற்றும் பாத்திரங்கள் என ரூ. 60 ஆயிரம் மதிப்பில் 13 பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளை அரசு வழங்கி உள்ளது. முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் வழங்கி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கலெக்டர் பிருந்தாதேவி, டி. எம். செல்வகணபதி எம். பி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, மாவட்ட அறங்காவலர் நியமன குழுத்தலைவர் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி