சேலம் மாவட்டம் கெங்கவல்லி மாருதி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48), விவசாயி. இவர் தனது டிராக்டரை நேற்று காலையில் அங்குள்ள தனது விவசாய தோட்டத்தில் நிறுத்தி இருந்தார். அவர் அந்த டிராக்டரை இயக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள தோட்டத்து கிணற்றில் பாய்ந்தது. 60 அடி ஆழ கிணற்றில் 20 அடி அளவில் தண்ணீர் இருந்தது. இதனால் டிராக்டருடன் கிணற்றுக்குள் பாய்ந்த முருகேசன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து தகவல் கிடைத்ததும், கெங்கவல்லி நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிரேன் மூலம் கிணற்றில் தவித்த முருகேசனை மீட்டதுடன், டிராக்டரையும் மீட்டனர்.