சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் போலீசார் மற்றும் வருவாய் துறை அனுமதி இன்றி நேற்று (ஜனவரி 16) மாலை ஊர் பொதுமக்கள் சார்பாக தங்கள் வளர்த்த காளை மற்றும் எருது மாடுகளை அழைத்து வந்து ஊர் மாரியம்மன் கோவில் முன்பு பூஜை செய்த மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு எருதாட்டம் விடப்பட்டது. இந்த எருதாட்டத்தில் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி காளை மற்றும் எருது மாடுகளை விடப்பட்ட நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் எருதாட்டத்தை தடுத்து நிறுத்தினர்.