வட இந்தியாவில் அதிகம் வளர்க்கக்கூடிய ஒரு வகை எருமைதான் முர்ரா. 500-600 கிலோ எடை கொண்ட இந்த மாடுகள் தினமும் 12-18 லிட்டர் வரை பால் கொடுக்கும். ஒரு வருடத்திற்கு சுமார் 4000 லிட்டர் வரை பால் கிடைக்கும். இதன் பாலில் 7-8% வரை கொழுப்பு இருப்பதால் நிறைய ஏடு வரும். இதிலிருந்து தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி போன்ற உபரிப் பொருட்களும் செய்து நல்ல லாபம் பார்க்கலாம். 1 லிட்டர் பால் ரூ.60 என வைத்து 18 லிட்டர் விற்றால் மாதம் ரூ.32,000 வரை லாபம் பார்க்கலாம்.