தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்

77பார்த்தது
தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்
சேலம் மாநகராட்சியுடன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுகழகம் (தாட்கே) இணைந்து, சேலம் கோட்டை மாநகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு கடன் திட்டங்களை தேசிய சபாய் கரம் சாரிஸ் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக நிதியுதவிகளை அளித்து வருவது குறித்து தாட்கோ திட்டத்தின் மாவட்ட மேலாளர் ராமதாஸ் விரிவாக பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இம்முகாமில், சேலம் மாநகராட்சியில் 724 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கும், சேலம் மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை கட்டணமில்லா கண் பரிசோதனை செய்தனர். சேலம் மாநகராட்சி மருத்துவத்துறை அனைத்து தூய்மைப் பணியாளர்களின் உடல் பரிசோதனை செய்து அதற்கான மருத்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.

இம்முகாமினை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். துணை மேயர் மா. சாரதாதேவி சிறப்புரையாற்றினர். துணை ஆணையாளர் பூங்கொடி அருமைக்கண் விளக்க உரையாற்றினார். மேக்ஸ் விஷன் மருத்துவமனை மருத்துவர் ஷோபாகினி சிறப்புரையாற்றி நினைவுப் பரிசு வழங்கினார். அதனைத் தொடர்ந்து திட்டம் குறித்த விழிப்புணர்வினை தாட்கோ மாவட்ட மேலாளர் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி