சர்க்கரை நோய் இருப்பவர்கள் சோடா குடிப்பதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகி உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். சோடாவில் சேர்க்கப்படும் அதிகப்படியான வேதிப்பொருட்களால் கல்லீரல் மற்றும் குடல் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சோடாவை அதிகமாக குடித்து வந்தால் உடலில் உள்ள கால்சியம் சத்துக்கள் முழுவதுமாக குறைந்து எலும்புகள் வலுவிழக்கலாம். டயட் சோடாவை குடித்தாலும் அது உடல் எடையை அதிகரிக்க தான் செய்யும் என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.