சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் நண்பர்கள் குழு சார்பில் 35 ஆண்டுகளாக பாரம்பரியமான குதிரை வண்டி ஓட்டப்பந்தயம் [ரேஸ் போட்டி] ஆத்தூர் - சேலம் நெடுஞ்சாலையில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ரேஸ் போட்டியில் முதலில் சிறிய குதிரைக்கான போட்டியில் 10 கி.மீ தூரம் போட்டி எல்லையாகவும், மேலும் பெரிய குதிரைக்கான போட்டியில் 15 கி.மீ தூரம் எல்லை கோடாக நிர்ணயிக்கப்பட்டு நடைபெறும். இந்த ரேஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாச்சியார்கோவில், குமாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து குதிரைகள் கலந்துகொள்வது வழக்கம். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஸ் போட்டிக்காக குதிரை வீரர்கள் தங்களது குதிரைகளை 48 நாட்களுக்கான பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டும் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு ரேஸ் போட்டி நடைபெறாது என பொங்கல் விழா குழுவினர் தெரிவித்தனர். இதுகுறித்து அருண்குமார் கூறுகையில், பல ஆண்டுகளாக ஆத்தூர் பகுதியில் ரேஸ் போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் இந்த ஆண்டு நடைபெறாததால் வேதனை அடைப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போட்டியை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.