சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் மழை நீர் சேகரிப்பு தொட்டி பகுதியில் புற்கள், செடிகள் வளர்ந்துள்ளது. இதில் ‘கஞ்சா’ செடி போன்று நான்கு அடி உயரத்துக்கு மேல் ஒரு செடியும் ஒன்றை அடியில் மூன்று செடிகள் என மொத்தம் நான்கு செடிகள் இருந்தது.
இது தொடர்பாகஆத்தூர் டி. எஸ். பி. , சதீஷ்குமாருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவின் பேரில் ஆத்தூர் நகர போலீசார், வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள வளாகத்தில் உள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் வளர்ந்திருந்த நான்கு செடிகளையும் வேருடன் பிடிங்கிச் சென்றனர்.
அந்த செடி குறித்து ஆத்தூர் வனச்சரக அலுவலகத்தில் எந்த வகை செடி என விசாரணை செய்தனர். கஞ்சா செடி போன்ற தோற்றத்தில் இருந்ததால் அந்த செடி குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.