சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையம் ஜெய்வின்ஸ் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் சி. பி. எஸ். இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் சிறப்பிடம் பிடித்து சாதித்து உள்ளனர். அந்த வகையில் பள்ளிக்கூட அளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 484 மதிப்பெண் பெற்று மாணவி வி. எஸ். தியா முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் எஸ். பவின்ஆதித்யா 477 மதிப்பெண்ணும், டி. ஜெ. சேனாஸ்ரீ 476 மதிப்பெண்ணும் பெற்று முறையே 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்தனர்.
பத்தாம் வகுப்பு ெபாதுத்தேர்வில், மாணவி பி. பிரனாவதாரணி 500-க்கு 495 மதிப்பெண் பெற்று பள்ளிக்கூட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவிகள் எஸ். ஹன்சிகா, ஜெ. டி. ரிதன்யா ஆகியோர் 483 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவர் எஸ். கே. லோகித்சரண் 481 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு தாளாளர் இளவரசு, செயலாளர் இளையராஜா, நிர்வாகி அன்புராணி இளவரசு, வனிதா இளையராஜா, முதல்வர் கிறிஸ்டோபல் ஜெர்மி, நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் பரிசுகள் அளித்தும், சால்வை அணிவித்தும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.