சோழவந்தான் திரெளபதி கோவிலில் திருக்கல்யாணம்

74பார்த்தது
சோழவந்தான் திரெளபதி கோவிலில் திருக்கல்யாணம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு திரெளபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (மே 15) புதன்கிழமை நடைபெற்றது. பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண் வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம்பிள்ளை குடும்பத்தினர் சார்பாக, அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி