கெங்கவல்லியில் மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் உயிரிழப்பு

75பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி இரண்டாவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆறுமுகம். இவர் தனது விவசாய நிலத்தில் விவசாயத்தோடு உபதொழிலாக கால்நடைகளை பராமரித்து வருகிறார். வழக்கம்போல் காலையில் பால் கறப்பதற்காக தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது பட்டியில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஆடுகளை மர்மவிலங்கு கடித்து ரத்தவெள்ளத்தில் ஆடுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

பட்டியில் கட்டிவைக்கப்பட்டிருந்த 11 ஆடுகளையும் மர்மவிலங்கு கடித்துக் கொன்றது என்பது குறித்து வருவாயதுறையினர் மற்றும் கால்நடைமருத்துவர் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கால்நடைதுறையினர் உடற்கூறாய்வுக்காக ஆடுகளை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வருவாயதுறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி