எடப்பாடி: பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொலை

6965பார்த்தது
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து இருப்பாளி கிராமம், குறுக்கப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி பெருமாய்(வயது50), வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. மாணிக்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அவரது ஒரே பெண் பிள்ளையை திருமணம் செய்து கொடுத்துவிட்டு தனியாக வசித்து வந்தார். நேற்று பிப்ரவரி 11ஆம் தேதி இரவு உறங்கிக் கொண்டிருந்த பெருமாயை நள்ளிரவில் இழுத்துச் சென்று வாசப்படியில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்த சங்ககிரி துணை கண்காணிப்பாளர் ராஜா, எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா பூலாம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம், ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துப்பறியும்மோப்பநாய் லில்லி வரவழைக்கப்பட்டு சம்பஇடத்திலிருந்து ஒரு கிலோமீட்டரில் சென்று திரும்பி வந்தது. பெருமாயி உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா, பூலாம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம் ஆகியாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றார்கள். எடப்பாடியில் நல்லிரவில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி