கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோர விபத்து (வீடியோ)

68பார்த்தது
சேலம் இரும்பாலை அருகே உள்ள கொல்லப்பட்டியில் அம்மன் கோயில் திருவிழாவில் வானவேடிக்கை நடந்த போது, பைக்கில் இருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டு வெடித்ததில் பைக்கில் இருந்த சக்திவேல் (26), அருகில் இருந்த 9 வயது சிறுவன் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி