1.2 கோடிக்கும் அதிகமான அமேசான் பங்குகளை நிறுவனத்தின் செயல் தலைவர் ஜெஃப் பெசோஸ் விற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அவை சுமார் ரூ.17 ஆயிரம் கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது. பெசோஸ், கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் 1,19,97,698 பங்குகளை விற்றதாகவும், இவை 10 லட்சம் முதல் 32 லட்சம் பங்குகள் வரை விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 70 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 5 கோடி அமேசான் பங்குகளை விற்க பெசோஸ் முன்மொழிந்துள்ளார்.