கொங்கணாபுரம் பேரூராட்சியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம்

75பார்த்தது
கொங்கணாபுரம் பேரூராட்சியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க தீர்மானம்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய பகுதியில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்ககிரி-ஓமலூர் பிரதான சாலையில் கொங்கணாபுரம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, வரும் நாட்களில் நிர்வாகிகள் கிராமப்புற பகுதிகளில் உள்ள இளைஞர்களை அணுகி தி.மு.க. இளைஞரணியில் உறுப்பினராக சேர்ப்பது குறித்தும், அடுத்து வரும் தேர்தல் காலங்களில் கட்சி நிர்வாகிகள் செயல்படுத்த வேண்டிய யுத்திகள் குறித்தும், ஒன்றிய பகுதியில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தார்.

கூட்டத்தில் கொங்கணாபுரம் பேரூராட்சி பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது உள்பட 8 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், சுந்தரம், பேரூராட்சி தலைவர் சுந்தரம், முன்னாள் தலைவர் அர்த்தனாரீஸ்வரன், பாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி