வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (டிச. 16) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால், தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் நாளை (டிச. 17) மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் வழங்கியுள்ளது.