உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு ரூ.11 கோடி பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.5 கோடி வழங்கினார். தொடர்ந்து, இன்று சென்னை திரும்பும் உலக செஸ் சாம்பியன் குகேஷை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரை அழைத்துச் செல்லும் காரில், அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளது.