காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சில நாட்களாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மாவட்டத்துக்கு உட்பட்ட மில்லர்புரத்தில் உள்ள சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.