விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் கருவறைக்கு முன்னிருக்கும் அர்த்த மண்டபத்தில் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கமளித்த கோயில் நிர்வாகி, "ஜீயர்கள் தவிர அர்த்த மண்டபத்திற்குள் யாருக்கும் அனுமதி கிடையாது, அங்கு உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி இல்லை" என கூறியுள்ளார்.