சேலம் அருகே தேவூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

1057பார்த்தது
சேலம் அருகே தேவூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
சேலம் மாவட்டம் தேவூர் சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ் ராம் தலைமை தாங்கினார். தேவூர் பேரூராட்சி செயலாளர் வனிதா வரவேற்றார். இதில் தலைமை இடத்து தாசில்தார் தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, மின்வாரிய உதவி பொறியாளர் கதிரேசன், வட்ட வழங்கல் அலுவலர் அமுதா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர். இதில் 341 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தேவூர் பேரூர் தி. மு. க. நகர செயலாளர் முருகன், பேரூராட்சி தலைவர் தங்கவேல், துணை தலைவர் தன்ராஜ், கவுன்சிலர்கள் சக்திவேல், வள்ளிநாயகி தங்கவேல் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி