சேலம் கருப்பூர் வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (50), கூலி தொழிலாளி. அந்த பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று வீட்டில் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக வெளியே
வந்தார். அப்போது அங்கிருந்த ரவி, திடீரென சிறுமியின் வாயை மூடி தூக்கி சென்றார். பின்னர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் யாரிடமும் சொல்லக் கூடாது என அவரை மிரட்டியுள்ளார். வீடு திரும்பிய சிறுமி இது பற்றி தனது பெற்றோரிடம்
தெரிவித்தார். இதனை
கேட்டுஅதிர்ச்சியடைந்த பெற்றோர், சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அவரை பிடிப்பதற்காக சென்ற போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இன்று அவர்
போலீசாரின் பிடியில்
சிக்கினார். அவரிடம்
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.