9 இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

81பார்த்தது
9 இடங்களில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
தமிழகத்தில் பொதுமக்கள் அடிக்கடி அணுகும் 13 துறைகள் சார்ந்த சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் கிடைத்திட மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சேலம் மாவட் டத்தில் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி, அனைத்து நக ராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ் சாயத்து பகுதிகளில் சிறப்புடன் செயல்படுத்திட கடந்த மாதம் 18-ந் தேதி முதல் வருகிற 6-ந் தேதி வரை 16 நாட்களில் 142 முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டு முகாம்கள் நடந்து வரு கிறது. இதற்காக முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 13-வது நாளான நாளை (புதன்கிழமை) சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் 27-வது வார்டுக்கு உட்பட்ட சத்திரம் பகுதியில் உள்ள ராஜேந்திர மாநகராட்சி கட்டிடத்திலும், அம் மாபேட்டை மண்டலத்தில் 41-வது வார்டில் பாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறத்தில் அமைந்துள்ள முத்துமஹாலி லும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 31-வது வார்டு கோட்டை சமுதாய கூடத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலம் 57-வது வார்டு கருங்கல்பட்டி இட்டேரி ரோட்டில் உள்ள எஸ். எஸ். மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி