துணைமுதலமைச்சர் ஸ்டாலின் மகன் என்ற அனுபவம் மட்டுமே உள்ளது

77பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில்அக்கட்சியின்53 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. பி. முனுசாமி கலந்து கொண்டு பேசத் தொடங்கியவுடன திடீரென கனமழை பெய்தது தொண்டர்கள் எல்லாம் இருக்கையில் இருந்து எழுந்து கடைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்
திமுக அரசு ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கிறது அது எவ்வளவு தூரம் பலன் அளிக்கிறது. குடிகார புருஷன் பிடுங்கி கொண்டு செல்கிறான். அந்த சாராயத்திலும் என்ன நிலைமை அதிமுக ஆட்சிக்காலத்தில் கடைசி சரக்கு 120 ரூபாய் இருந்ததாகவும் அதை வாங்கி குடித்துவிட்டு போயிட்டுஇருந்தார்கள். ஆனால் தற்போது 160 ரூபாய் விற்பதாகவும், அந்த 40 ரூபாயும் அரசாங்கத்திற்கு வருமானம் என்றால் இல்லை, சாராய ஆலை அதிபர்களுக்கு போவதாகவும் குற்றம் சாட்டினார். சாராய ஆளை அதிபர்கள் டி ஆர் பாலு, ஜெகத்ரட்சகன் கனிமொழியும் இருப்பதாக சொல்கிறார்கள் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. மேலும் துணை முதலமைச்சர் ஆவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு மகன் என்ற அனுபவம் என்பதை விட என்ன அனுபவம் இருக்கிறது. என பேசினார்.
கூட்டம் முடியும் வரை மழை நிற்காததால் காலி சேர்களை பார்த்து மேடையில் நின்றவாறு பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி