சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் 29 பேர் டெங்கு முன்கள பணியாளராக உள்ளனர். நகராட்சி பகுதிகளில் டெங்கு மருந்து, காய்ச்சல் உள்ளிட்டவைகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தங்களுக்கு நான்கு மாதமாக சம்பளத்தொகை நிலுவையில் இருப்பதாகவும், பிஎஃப் தொகை கட்டவில்லை எனவும், சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தகவல் இருந்து வந்த நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்ஸாண்டர் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவரை முற்றுகையிட்ட முன்கல பணியாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து டெங்கு முன் கள பணியாளர்கள் கூறும் போது; நான்கு மாத சம்பளம் நிலுவையில் உள்ள நிலையில் இரண்டு மாத சம்பளம் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு மாத சம்பளம் இன்று வழங்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்த நிலையில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்