சேலம்: செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர்

81பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. திட்டத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் துவக்கி வைத்தார். அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று பொதுமக்களுக்குத் தேவையான உடனடி வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி உள்ளிட்டவற்றை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி. கணேசன்; அரசு இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்சினை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, சர்வர் பிரச்சினை இருந்தது உண்மைதான், ஆனால் தற்போது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், 18 நலவாரியங்களில் இரண்டில் மட்டுமே வாரியத் தலைவர் நியமிக்கப்பட்ட நிலையில் மற்றவைகளுக்கு ஏன் தலைவரை நியமிக்கவில்லை என கேட்டதற்குப் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி