விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரன்பட்டி அருகில் கருப்பண்ணசாமி சேவா சங்கம் சார்பில் பிரம்மாண்ட கருப்பசாமி சிலை அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. மூன்று அடி உயர பீடம் மற்றும் 21 அடி உயரத்துடன் கையில் அரிவாளுடன் கம்பீரமாக கருப்பசாமி காட்சி தருகிறார். கரூரிலிருந்து 70 டன் பெரிய பாறை எடுத்துவரப்பட்டு, பழனி மலை அடிவாரத்தில் சிற்ப கலைக்கூடம் ஒன்றில் இந்த சிலை செதுக்கப்பட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.