சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு நடைபெறுகிறது. அங்கு, துபாய் வெள்ளம், சீனா,பிரேசில், ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ளத்தை சுட்டிக் காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். மேலும் அவர் கூறியதாவது, “காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பிரச்னைகளின் தீவிரத்தை உணர வேண்டும். காலநிலை மாற்றத்தை கல்வித் துறை மூலம் புகட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்” என்றார்.