யூபரி தர்பூசணி பழம் உலகிலேயே காஸ்ட்லியான பழமாகும். இந்த வகை பழங்கள் ஜப்பானில் உள்ள பெரிய தீவான ஹொக்கைடோவில் விளைகிறது. இவை ‘தர்பூசணிகளின் ராஜா’ என அழைக்கப்படுகிறது. இதன் சுவை முற்றிலும் தனித்துவமானது. இதை வளர்ப்பதற்கு மிகுந்த கவனிப்பு தேவை. இதன் உட்புறம் ஆரஞ்சு நிறத்திலும், வெளிப்புறம் பச்சையாகவும் உள்ளது. இதன் விலை ஒரு கிலோ இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,000 ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த பழம் வேறு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.