காதலுக்கு கண் இல்லை என்பதோடு வயது வித்தியாசமும் இல்லை என்பதை நிரூபிக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கின்றன. அதில் ஒன்று தான் பாகிஸ்தானை சேர்ந்த 35 வயது இளைஞர் நஹூம் என்பவர் 70 வயதான கனேடிய பெண்ணை மணந்து கொண்டது. இருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வேறு வேறு நாடுகளில் வசித்த போதிலும், அவர்களுக்குள் அதிக வயது வித்தியாசம் உள்ள போதிலும் காதல் அவர்களை ஒன்று சேர்த்தது.