கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் சாலையில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. தலையை தவிர்த்து மற்ற உறுப்புகள் அனைத்தும் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், எலும்புக்கூட்டின் அருகே எலுமிச்சை பழம், சிறிய விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாராவது மாந்திரீகம் செய்து எலும்புகளை வீசிவிட்டுச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.