சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் இருந்த 16 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கடத்தப்பட்டதையடுத்து போலீசார் ஆட்டோவை பின்தொடர்ந்து வேகமாக சென்றனர், இதையறித்து சிறுமியை விட்டுவிட்டு ஆட்டோவில் இருந்தவர்கள் தப்பினார்கள்.