ஆத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரோட்டரி மிட்டவுன் சார்பில்போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் என மூன்று பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் உள்ளிட்ட துவக்கி வைத்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பயணியர் மாளிகை பகுதியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் கடைவீதி, புதுப்பேட்டை, காமராஜனர் சாலை, காந்திநகர், விநாயகபுரம், உடையார்பாளையம், வழியாக மீண்டும் பயணியர் மாளிகையை வந்திருந்தது.