சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மாவட்ட சிறையில்
மேட்டூர் சேர்ந்த 19 வயது வாலிபர் (யோகேஸ்வரன்) கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 19 வயது வாலிபர் மற்றும் சக கைதிகள் சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த ஆசிக் அலி (குண்டாஸ் வழக்கு குற்றவாளி), கார்த்தி சதீஷ் சூர்யா ரவிச்சந்திரன் (அனைவரும், கொலை கொள்ளை வழிபறி வழக்கில் கைதானவர்கள்) ஐந்து பேர் செஸ் (சதுரங்கம்) விளையாடியுள்ளனர். இதில் பிரச்சனை ஏற்படவே ஐந்து கைதிகள் சேர்ந்து 19 வயது வாலிபரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் அதை தடுக்க முற்பட்டபோது சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த 19 வயது வாலிபர் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் 19 வயது வாலிபரான சிறை கைதி அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைதிகள் தாக்கி கொண்ட விவகாரத்தில் சிறை பணிகளை கவனிக்க தவறிய காவலர்கள் செந்தில்குமார் மற்றும் ராஜ வர்மன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார்.