ஆத்தூர் நகராட்சி 42லட்சம் வரிநிலுவை வணிகவளாக பாதை துண்டிப்பு

75பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதை அவரது மகன் சுதர்சன் பாபு ஆகிய நிர்வாகித்து வருகின்றனர். 21 கடைகள் உள்ள வணிக வளாகத்தில் கடந்த 1998 ஆம் வருடம் வரி நிர்ணயம் செய்யும்போது அதிக வரி நிர்ணயிக்கப்பட்டதாக கூறி ஆத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சுதர்சன் பாபு என்பவர் 2000 வருடம் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கு கடந்த 2016 ஆம் வருடம் சுதர்சன் பாபு கட்ட வேண்டிய பழைய பாக்கி மட்டும் வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு உள்ளதாக ௯றப்படுகிறது. நேற்று கட்டிட உரிமையாளருக்கு 42 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவை இருப்பதாக கூறி சொத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் பதாகை வைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று வணிக வளாகத்திற்கு செல்லும் இரு வழிகளையும் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி