ஆத்தூர் ஒரே செடியில் 150க்கும்மேற்பட்டபிரம்ம கமலம்பூ பூத்தது

83பார்த்தது
அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் மூன்று இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக தென்படும். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த, ஆசிரியர் முருகன்
இவரது வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. கடந்தாண்டு இவரது வீட்டில், நான்காவது முறையாக, பூக்கள் பூத்துள்ளது. கடந்தாண்டில் நவம்பர் 28ம் தேதி ஒரே நேரத்தில் 100 பிரம்மகமலம் பூக்கள் மலர்ந்தன. இம்முறை, பிரதோஷ நாளான நேற்று இரவு 10: 00 மணிக்கு மேல், 150க்கும் மேற்பட்ட பூக்கள் மலர்ந்துள்ளன.
இதை பார்த்து, குடும்பத்தினர் பக்தி பரவசம் அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே ஆசிரியர் முருகன் குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வேண்டினர்.
தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள், இவரது வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி