குழந்தை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு

56பார்த்தது
குழந்தை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மணிவேல் (வயது 24). விவசாயி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான 17 வயது சிறுமியை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக ஆத்தூர் குழந்தை தடுப்பு பிரிவு விரிவாக்க அலுவலர் மனோ ரஞ்சிதத்திற்கு புகார் வந்தது. இதுகுறித்து அவர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி குழந்தை திருமணம் செய்த மணிவேல், அவருடைய தாய், தந்தை, சிறுமியின் தாய், தந்தை என 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி