கங்கை நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பூதா கேதார் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் பால்கங்கா நதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் கிராமங்களில் உள்ள சில கடைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.