ரூ. 3.55 கோடியை இழந்த ஆசிரியை! எச்சரிக்கை தகவல்

59பார்த்தது
ரூ. 3.55 கோடியை இழந்த ஆசிரியை! எச்சரிக்கை தகவல்
உத்தரபிரதேசத்தில் சைபர் மோசடியில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஷம்பா ரக்‌ஷித், ரூ.3.55 கோடியை இழந்த நிலையில் அது தொடர்பில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷம்பாவுக்கு போன் செய்த நபர் போலீஸ் என கூறிக்கொண்டு, உங்கள் சிம் கார்டு மூலம் சட்டவிரோத செயல்கள் நடந்ததால் உங்களை கைது செய்ய போலிஸ் வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து தன் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பினால் விசாரணைக்கு பின் திருப்பி தரப்படும் என சொன்னதை நம்பிய ஷம்பா பெரும் தொகையை அவருக்கு அனுப்பியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி