கள்ளகாதலியின் குழந்தைகளை கொன்ற கொடூரன்

24850பார்த்தது
கள்ளகாதலியின் குழந்தைகளை கொன்ற கொடூரன்
தர்மபுரி மாவட்டம் ஏர்க்கொல்லப்பட்டியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(30) - பிரியா(24) தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தனது மனைவியுடன் பாலகிருஷ்ணன் முண்டாசு புறவடையில் உள்ள மாமனார் வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் பிரியாவுக்கு அதே பகுதியில் உள்ள லாரி டிரைவர் வெங்கடேஷுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த உறவை பிரியா திடீரென நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், பிரியாவின் இரண்டு மகன்களை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இருவரது கண்களிலும் மிளகாய் பொடியை தூவி கல்லால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.