பொதுவாக பூனை குறுக்கே சென்றால் போகிற காரியம் உருப்படாது என்ற மூட நம்பிக்கை இன்றளவும் நம்பப்பட்டு வருகிறது. உண்மையில் அதற்கு அர்த்தம் அதுவல்ல. முன்பெல்லாம் தற்போது இருப்பது போல் போக்குவரத்து இல்லை. எனவே பக்கத்துக்கு ஊருக்கோ அல்லது நீண்ட தூரம் பயணம் செல்லும்போது குதிரை அல்லது மாடு பூட்டிய வண்டியில் செல்வார்கள் அப்போது காட்டுப்பகுதியில் செல்லும்போது குறுக்கே வருவது பூனையோ, புலியோ, சிங்கமோ எது என தெரியாது. ஆனால் அதன் கண்கள் மட்டும் வெளிச்சமாக பளிச்சென்று தெரியும். இதனால் மாடுகள், குதிரைகள் மிரண்டு வண்டிக்கு ஏதேனும் ஆகிவிடலாம். அதனால் அவ்வாறு குறுக்கே ஏதேனும் வரும்போது வண்டியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துவிட்டு செல்வார்கள். ஆனால் அது சபசகுனம் என பரப்பப்பட்டுள்ளது.